--- --:--:-- --

வீட்டிற்குள் இருந்து வந்த கரும்புகை.. திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

10

விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டில் இருந்த பிரிட்ஜ் தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது. அரகண்டநல்லூர் அருகே மணல் பூண்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் தனது மனைவி உயிரிழந்ததால் தனியாக வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்கு சென்றுள்ளார்.

 

அவரது வீட்டில் இருந்து கரும்புகள் வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்ட பிரிட்ஜை அணைத்தனர். வீடு முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்ததால் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon