--- --:--:-- --

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவருக்கு நடந்த அதிர்ச்சி..!

5

டிஎம் எந்திரத்தில் இருந்து தவறவிட்ட 47 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த இரண்டு நபர்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் காந்திநகர் பகுதியில் சேர்ந்தவர் தனது நண்பர் தங்கபாண்டியன் பணம் எடுப்பதற்காக பெரியகுளம் தென்கரை வைகை அணை சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்திற்க்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது பணம் செலுத்தும் ஏடிஎம் எந்திரத்தில் யாரோ விட்டுச் சென்ற 47 ஆயிரத்து 500 ரூபாய் இருந்துள்ளது. சுந்தர், தங்கபாண்டியன் இருவரும் அந்த பணத்தை எடுத்து பெரியகுளம் தென்கரை போலீசில் ஒப்படைத்து உரிய நபரிடம் பணத்தை ஒப்படைக்கும் படி கேட்டுக் கொண்டனர்.

 

விசாரித்த பொழுது பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் செலுத்திய பொழுது என்டர் பட்டனை சரியாக பிரஸ் செய்யாததால் பணம் செல்லாமல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்தது தெரிய வந்தது.

 

இதனை உறுதி செய்த பின்னர் ராஜ்குமாரிடம் போலீசார் பணத்தை ஒப்படைத்தனர். மேலும் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் நேர்மையாக போலீசில் ஒப்படைத்த சுந்தர், தங்கபாண்டி இருவருக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon