திடீரென வழுக்கிய சாலை..அடுத்தடுத்து சரிந்த வாகனங்கள்..!
ஹைதராபாத்தில் சாலையில் ஆயில் சிந்தியதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சாலையில் சென்ற எண்ணெய் லாரியிலிருந்து எரிபொருள் சிந்தியுள்ளது.
இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கட்டுப்பாட்டு இழந்து சாலையில் சறுக்கி விழுந்துள்ளனர். இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காயம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக வீடியோ இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த சாலையில் மரத்தூள் மற்றும் மணலை தெளித்து போக்குவரத்து போலீசார் சாலையை சீர் செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





