திருச்செந்தூர் கடலில் கிடைத்த பொக்கிஷம்..!
திருச்செந்தூர் கடலில் நூறாண்டு பழமையான இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள கடலில் இன்று சுமார் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. அப்பொழுது பாறைகளுக்கு அருகே நான்கடி உயரத்தில் பெரிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறைக்கு தகவல்கள் அளிக்கப்பட்டது. இதன் பேரில் தொல்லியல் துறையின் தலைவர் சுதாகர் மற்றும் பேராசிரியர் மதிவாணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மாதா தீர்த்தம் என தொடங்கி அந்த கல்வெட்டு 15 வரிகள் பொறிக்கப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து 100 அடி தூரத்தில் கிடைத்த மற்றொரு கல்வெட்டையும் தொல்லியல் துறையினர் கைப்பற்றினர். கல்வெட்டுகளை ஆய்வு செய்த இவர் இவை இரண்டும் சுமார் 50 முதல் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





