பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களோடு பிரதமர் கலந்துரையாடும் நிகழ்வு..!
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு இதுவரை 38 லட்சம் மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஆண்டுதோறும் தேர்வுக்கு முன் ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்துகிறார். இந்த ஆண்டின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதற்கு இதுவரை இல்லாத அதிக அளவாக 38 லட்சம் மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





