--- --:--:-- --

அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இன்று செல்கிறார் பிரதமர்..!

7

சாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இன்று செல்லும் பிரதமர் நரேந்திர மோடி எண்ணெய், எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

 

அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக அசாம் மாநிலம் சிலாபத்தர் என்கிற இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

 

இன்று மாலை மேற்கு வங்கம் பூக்லிக்கு செல்லும் அவர் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் நொவபாரா முதல் தக்னீஸ்வர் வரையிலான மெட்ரோ ரயிலின் விரிவாக்கத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon