காதலித்து கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த நபர்..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைமறைவாக இருக்கும் தனது கணவரை மீட்டுத் தருமாறு பெண்ணொருவர் நடத்திவரும் தர்ணா போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி பகுதியை சேர்ந்தவர் மேரி.
இவர் 14 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இயேசுதாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலிக்கும்போது மேரி கர்ப்பமாகியுள்ளார். பின்னர் திடீரென நேரில் சந்திப்பதை இயேசுதாஸ் நிறுத்தி விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் ஒரு பெண்ணை யேசுதாஸ் திருமணம் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு பின்பு இந்த செய்தி மேரியின் காதுகளில் வந்து சேர அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். நீதி விசாரணையில் மேரியை பற்றிய உண்மைகளை மறைத்து இயேசுதாஸ் மற்றொரு பெண்ணை திருமணம் செய்தது தெரியவந்தது.
இதனால் ஏசுதாஸின் மனைவி அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் ஊர்மக்கள் முன்னிலையில் மேரிக்கு யேசுதாசுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. மேரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை என்று கூறிவிட்டு இயேசுதாஸ் மீண்டும் தலைமறைவாகியுள்ளார்.
இந்த வழக்கு தாம்பரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்திற்கு வராமல் இயேசுதாஸ் நான்கு வருடமாக வழக்கை இழுத்தடித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நீதிமன்றம் யேசுதாசை கடுமையாக எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டதும் அதில் அந்த குழந்தை இயேசு தாசுவிற்கு பிறந்த குழந்தை என்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மாதா மாதம் குழந்தை ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் குழந்தையின் படிப்பு செலவை ஏசுதாஸ் ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தன் மகனின் பள்ளி செலவையும் இழப்பீடு தொகையையும் வழங்காமல் ஏமாற்றி வந்ததாக மீறி கூறியுள்ளார். இது குறித்து மேரி கேட்டபோது தான் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் இயேசுதாஸ் கூறியதாக மேரி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் மூன்று குழந்தைகள் இருப்பதால் மேரியுடன் தனக்கு பிறந்த மகன் செலவுகளை பார்க்க முடியாது என்றும் இயேசுதாஸ் கூறியதாக மேரி கூறியுள்ளார். இதனால் மேரி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.






