செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து பெர்சிவரன்ஸ் படம் பிடித்து அனுப்பிய காட்சி..!
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யவும், ஏற்கனவே உயிரினங்கள் இருந்தனவா அல்லது உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதா என ஆய்வு செய்ய பேர்சேவேரன்ஸ் என்ற ஆய்வு ஊர்தியை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த ஆண்டு அனுப்பியது.
அங்கு வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் சில படங்களை அனுப்பி இருந்த நிலையில் தற்போது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஷோரோம் பள்ளத்தாக்கில் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது பெர்சிவரன்ஸ்.
மணற்பரப்பில் சக்கரங்கள் பதிந்த தடம் போன்றவற்றிலும் பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தியை படம் பிடித்து அனுப்பியுள்ளது. ஜசோரா பள்ளத்தாக்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன் ஏரியாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்பும் நிலையில் அதன் பரப்பை பேர்சேவேரன்ஸ் மிகத் தெளிவாக படம் பிடித்துள்ளது.
பெரிய மலைத் தொடர்கள் மற்றும் சிறிய மேட்டுப்பாங்கான நிலப்பகுதி குவிந்து கிடக்கும் கற்கள் போன்றவையும் அங்கு காணப்படுகிறது.






