--- --:--:-- --

500 ரூபாய் கூலி கொடுத்து நாயை அடித்துக் கொன்ற நபர்..!

8

துரையில் 500 ரூபாய் கூலி கொடுத்து மனிதரை கொள்வதுபோல் நாயை அடித்துக் கொன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை செல்லூர் சிவகாமி தெரு பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவன் மனிதத்தன்மையற்ற முறையில் ஈவு இரக்கமின்றி உருட்டு கட்டையால் நாயை தலையில் அடித்துக் கொன்று பிளாஸ்டிக் பையில் நாயை கட்டி தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலாக பரவி வந்தது.

 

சம்பவம் குறித்து வழக்கு வட்ட கிராம அலுவலர் முத்து மொழி செல்லூர் காவல் நிலையத்தில் விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் நாயை அடித்துக் கொன்ற அவர் செல்லூர் கண்மாய்க்கரை கணேசபுரத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

விமல்ராஜை பிடித்து போலீசார் விசாரித்த போது சிவகாமி தெருவை சேர்ந்த முத்து சரவணன் என்பவர் தினமும் தன்னை இந்த நாய் கடிக்க வருவதாக கூறி 500 ரூபாய் கொடுத்து கொலை செய்யச் சொன்னார் எனக் கூறியுள்ளார்.

 

பொருளாதாரமாக வேலை இல்லாததால் அந்தப் பணத்துக்கு ஆசைப்பட்டு நாயை கொலை செய்தேன் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவனை கைது செய்து விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

 

விலங்குகள் நல ஆர்வலர்கள் நாயை அடித்துக் கொண்டவர்களை கைது செய்யப்பட்டதோடு நின்றுவிடாமல் இதுபோன்ற செயல்களில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon