பேருந்து ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி..! சாதுர்யமாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர்..!
புதுக்கோட்டை அருகே அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் வழியாக ஈரோடு நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் ராமர் என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த பேருந்தை சுமார் 50 பயணிகள் வரை பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
பேருந்து கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியை கடக்கும்போது ஓட்டுநருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் சாதுரியமாக பேருந்தை சாலையோரத்தில் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. குடும்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை சாலையோரத்தில் நடத்தியதால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் விபத்தின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.







