--- --:--:-- --

நடுவானில் விமான ஊழியர்களிடம் ரகளை செய்த பயணி..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!

3

பிரான்சில் இருந்து டெல்லி வந்த விமான பயணியின் ரகளையால் பல்கேரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏர் பிரான்சிஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பாரிசில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது.

 

இந்தியாவை சேர்ந்த பயணி ஒருவர் சக பயணிகளுடன் சண்டையிட்டுக் கொண்டே வந்துள்ளார். விமான ஊழியரை தாக்கி விமானியின் கதவைத் தட்டி திறக்கும்படி கூறி ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த ஏரியாவில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

 

அந்த நபர் இறக்கி விடப்பட்டார். தற்போது இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon