7 பதக்கங்களை வென்றுள்ள நடிகர் அஜீத்..!
சென்னை ரைபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான 46-வது துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் 3 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை பெற்று சாதித்துள்ளார்.
கடந்த 3ஆம் தேதி முதல் ஆவடியை அடுத்து அதில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை மூன்றாம் அணியின் 5 நாட்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
இதில் சீனியர் பிரிவில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். 25 மீட்டர் 3 தங்கம், 10 மீட்டரில் இரண்டு சில்வர், 15 மீட்டரில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை தாக்கியுள்ளார். இதன் மூலம் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க நடிகர் அஜித் தேர்வாகியுள்ளார்.






