--- --:--:-- --

நாளை மறுநாள் முதல் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்..!

8

மிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் ஓடாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தனியார், பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி, வாடகை வாகனங்கள் இரவு நேரத்தில் அனுமதி இல்லை. இரவு நேர ஊரடங்கின் போது வெளிமாநில, வெளி மாவட்டம் இடையிலான தனியார், பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

 

ரயில், விமான நிலையங்களுக்கு டாக்ஸி அனுமதிக்கப்படும் என்பதால் விமானங்கள் வழக்கம்போல இயங்கும். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக் கழக தேர்வுகள் இணைய வழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கல்லூரி. பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணையவழி வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரொனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஞாயிறுகளில் இறைச்சி கடைகள், காய்கறி கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை.

 

ஞாயிறுகளில் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் திருமணவிழாவில் நூறு பேர், இறப்பு நிகழ்வில் 50 பேர் மட்டுமே அனுமதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா தலங்களுக்கு, உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களும் தடை.

 

கடற்கரை பகுதிகளுக்கும் அனைத்து நாட்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை. உயிரியல் பூங்காக்கள் அருங்காட்சியம் விளக்கம் அனைத்து நாட்களுக்கும் அனுமதி இல்லை. தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon