சினிமா ஆசைகாட்டி சிறுமியை வன்கொடுமை செய்த திரைப்பட டான்ஸர்..!
தனி அறையில் சிறுமியுடன் இருந்த சினிமா டான்ஸர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கம் அசோக் நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் 14 வயது மாணவியுடன் ஒரு இளைஞர் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் மாணவி மற்றும் இளைஞரை பிடித்தனர். அவர் 24வயது ஜெயசூர்யா என்பதும் அவர் சினிமாவில் பிரபல டான்ஸ் மாஸ்டர், இசை நடன குழுவில் நடனமாடுபவர் என்பதும் தெரியவந்தது.
அவருடன் இருந்த பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்ததாகவும் சினிமாவில் அறிமுகம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கைது செய்த போலீசார் இருவருக்கும் விடுதியில் இடம் கொடுத்த தனியார் விடுதி மேலாளர் ஸ்டீபன், சுரேஷ் கண்ணன் ஆகியோரையும் கைது செய்தனர்.





