--- --:--:-- --

மனைவி, மகள்களை சரக்கு ஆட்டோவில் அடைத்து தீயீட்டு கொளுத்திய நபர்..!

2

கேரள மாநிலம் ஆலப்புழாவில் சரக்கு ஆட்டோவில் மனைவியையும் மகளையும் அழைத்து தீ வைத்து கொளுத்திய நபர் ஒருவர் தன் மீதும் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். கொண்டிவரம்பா பகுதியை சேர்ந்த முகமது என்ற அந்த நபர் மீது போக்சோ வழக்கு ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் சரக்கு ஆட்டோவில் மனைவி மற்றும் இரண்டு மகளையும் உட்கார வைத்த முகமது அவர்கள் வெளியே வராதபடி கட்டிபோட்டு தீ வைத்ததாக கூறப்படுகிறது. பிறகு தன் மீது தீ வைத்துக் கொண்டவர் அருகிலிருந்த கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

தீயில் கருகி அவரது மனைவியும், 17 வயது மூத்த மகளும் உயிரிழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐந்து வயது இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 

Right Menu Icon