--- --:--:-- --

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!

1

மிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை மொத்தம் பள்ளிகள் மூலம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 539 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள் 30 ஆயிரத்து 760 பேரும் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

 

தேர்வுக்காக தமிழகம் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 936 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடைபெறுகிறது. தேர்வறை கண்காணிப்பாளர்கள் 51 ஆயிரத்து 710 பேர் நியமிக்கப்படவுள்ளனர். 108 இடங்களில் கேள்வித்தாள் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

மாணவ, மாணவியர் முக கவசம் அணிந்து வர கட்டாயம் இல்லை என்றாலும் உடல் நிலை பாதிப்பு உள்ளவர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும் மற்றும் மாணவர்கள் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு மையங்களில் செல்போன்களை எடுத்து வரக்கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

 

Right Menu Icon