--- --:--:-- --

இறந்ததாக கூறிய குழந்தை உயிருடன் பிழைத்த சம்பவம்..!

5

தேனியில் உயிருடன் இருந்த பச்சிளம் குழந்தை இறந்து விட்டதாக கூறி வாளியில் போட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தேனி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த 6 மாத கர்ப்பிணியான ஆரோக்கிய மேரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் தேனி கானாவிளக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

குறை பிரசவம் என்பதால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி வாளியில் போட்டு அடைத்து மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர். குழந்தையை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்ற தம்பதி அடக்கம் செய்ய முயன்றபோது குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்தது தெரியவந்தது.

 

உடனடியாக அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருந்த குழந்தை இறந்ததாக கூறி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon