--- --:--:-- --

மனைவியை கொன்றுவிட்டு கட்டை பையோடு ஊருக்கு கிளம்பிய கணவன்..!

4

னைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கட்டபையுடன் ஊருக்கு கிளம்பிய கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் 37 வயதான திருமலை குமார் .இவர் கோயிலில் உள்ள தனியார் அர்ச்சகத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் மனைவியும் குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வருகின்றனர்.

 

இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் விடுமுறைக்கு வீட்டில் வந்த திருமலை குமார் மனைவியின் இடத்தில் சந்தேகம் கொண்டு அவரை திட்டியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

ஆத்திரமடைந்து திருமலை குமார் தனது மனைவியை சாரமாதியாக கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரது மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அறிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமலை குமார் கைப்பையுடன் வெளியே சென்றுள்ளார்.

 

அவரை பார்த்த சிலர் என்ன விஷயம் எதற்காக செல்கிறீர்கள் மனைவி எதற்காக சப்தமிட்டார் என கேட்டதற்கு ஒன்றுமில்லை என தலையை அசைத்தபடி அவர் வெளியே செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கொலை சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய திருமலை குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon