--- --:--:-- --

பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் பதவி விலகல்

6

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் பதவி விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் தற்போது ‘ வீ தி லீடர்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

 

இந்த கட்சியில் பா.ஜ.க தலைவர்கள் உட்பட பலர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீகாந்த் கருனேஷ், அண்ணாமலை கட்சியில் சேருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon