கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த சிறுமி.. அடித்து கொலை செய்த கள்ளக்காதலன்..!
திருக்கோவிலூர் மாவட்டம் புழல் அருகே ஆறு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கணவனை பிரிந்த பெண்ணிற்கு ஒன்பது வயதில் மகனும், 6 வயதில் மகளும் இருந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், தன்னுடன் வேலை பார்க்கும் சீனிவாசன் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
அந்த பெண் வேலைக்கு சென்ற பொழுது ஆறு வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக சீனிவாசன் நாடகமாடிய நிலையில் விசாரணையில் கள்ளக்காதலனுக்கு இடையூறாக சிறுமி இருப்பதாக எண்ணி சீனிவாசனை சிறுமி அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.





