--- --:--:-- --

கலாஷேத்ரா மாஜி நடன ஆசிரியர் கைது..!

8

பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற தனக்கு நடன பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முன்னாள் மாணவி ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

 

வெளிநாட்டிலுள்ள முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் அவரையும் காணொளி காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் தற்பொழுது கலாஷேத்ராவில் பணிபுரியவில்லை என்பதும் அடையாற்றில் தனியாக நடனப்பள்ளி நடத்தி வருவதும் தெரிய வந்தது.

 

இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது செய்தனர். கடந்த ஆண்டு கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் மற்றும் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon