அசாம், மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது..!
மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அசாம் மாநிலத்தில் 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்ட நடவடிக்கையாக கடந்த முறையை விட தற்போது மாநிலம் முழுவதும் கூடுதலாக 37 சதவீதம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்காக 10 ஆயிரத்து 288 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையங்களிலும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளது.
30 தொகுதிகளில் 196 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்ட தேர்தல் நடக்கும் 30 தொகுதிகளில் 27 தொகுதிகள் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் வசம் உள்ளன. முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 5 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் ஒரு காலத்தில் நக்சல் பாதித்த பகுதிகளாக இருந்ததால் பதற்றமான பதவிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இரு கட்டங்களாக நடைபெறும் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளில் நடைபெறுகிறது. மேற்கு மற்றும் வடக்கு பிராந்தியத்தில் 11 மாவட்டங்களில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளிலும் மத்திய மாகாணத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது.






