--- --:--:-- --

உதயநிதி வந்த ஹெலிகாப்டரில் சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை..!

5

தேர்தல் பரப்புரைக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா பாஜக சார்பில் வேல்முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு அனைத்து கட்சிகளும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில் ஆ.ராசாவிற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் தனி ஹெலிகாப்டர் மூலம் உதகை எலிபேட் தளத்திற்கு வருகை தந்தார்.

 

அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் சோதனை செய்தனர். இதில் பணமும் விலை உயர்ந்த பொருட்களோ இல்லை என்று உறுதி செய்த பிறகு அங்கிருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

 

Right Menu Icon