--- --:--:-- --

இருபத்தி இரண்டு முறை ரத்ததானம் செய்த நாய்..!

4

பிரிட்டனை சேர்ந்த ஒரு நாய் இருபத்தி இரண்டு முறை ரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளது. பிரிட்டனில் உள்ள லிசியஸ் நகரை சேர்ந்த ஒருவர் நாயை வளர்த்து வருகிறார். இந்த நாய் தனது மூன்று வயதிலிருந்து ரத்த தானம் செய்யத் தொடங்கிவிட்டது.

 

மனிதர்களை போல நாய்களும் ரத்ததானம் செய்யலாம் என்பதால் நாயின் உரிமையாளர் நாயை 3 வயதிலேயே இரத்ததானம் செய்வதற்கு அனுப்பினார். நாய்களை பொருத்தவரையில் ஒரு வயது முதல் 8 வயது வரை இரத்த தானம் செய்யலாம்.

 

இந்த நாய் தன்னுடைய மூன்று வயதில் ரத்ததானம் செய்ய தொடங்கி தற்போது வரை 22 முறை ரத்ததானம் செய்துள்ளது. இப்போது எட்டு வயதாகி விட்டதால் ரத்த தானம் கொடுப்பதில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon