சக மாணவி பேச மறுத்ததால் தற்கொலை செய்த 10 ஆம் வகுப்பு மாணவன்..!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உடன் படிக்கும் சக மாணவி பேசுவதை நிறுத்தியதால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கொளத்தூர் அருகே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் தன்னுடன் படிக்கும் சக மாணவியிடம் பேசியுள்ளார். இருவரும் நட்புறவை தாண்டி பேசியதால் மாணவியின் தாய் அவரை கண்டித்ததாகவும் இதனால் மாணவி நண்பனுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும் செல்லப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அந்த மாணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் கஷ்டங்களை கண்டறிந்து பெற்றோர் அதனை தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.






