இளம்பெண்ணுக்கு 17 இடங்களில் கத்திக்குத்து..!
கேரளாவில் தன்னை ஏமாற்றியதாக கூறி இளம்பெண்ணை அவரது வீட்டில் புகுந்து 15 முறை கத்தியால் குத்தி இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்ட எல்லையோரம் உள்ள கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் 20 வயதான சூரிய காயத்ரி. அவர் கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையே அவரது வீட்டில் 28 வயதான அருண்குமார் சூரிய காயத்ரியை 17 முறை உடலின் பல்வேறு பாகங்களில் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். அவரை காப்பாற்ற வந்த மாற்றுத்திறனாளி தாய் மற்றும் தந்தையை அருண்குமார் தாக்கியுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அருண்குமாரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தானும் சூரிய காயத்ரியும் நெருங்கி பழகிய நிலையில் தன்னை கைவிட்ட ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூர்யகாயத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






