உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நாய்..!
அமெரிக்காவில் வேட்டைக்கு சென்ற இடத்தில் உரிமையாளரை நாய் ஒன்று சுட்டுக் கொன்ற வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒருவர் தனது செல்ல நோயுடன் வேட்டையாட காட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார்.
வாகனத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து பின்பகுதி சீட்டிலிருந்து துப்பாக்கி மேல் ஏறி மிதித்துள்ளது. இதில் துப்பாக்கியிலிருந்த குண்டு பாய்ந்து முன் பக்கம் இருந்த உரிமையாளரை சுட்டுக்கொன்றது. இதனால் மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.
இது தெரியாமல் அந்த வளர்ப்பு நாய் அவரை சுற்றி சுற்றி வந்துள்ளது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் 2001 ஆம் ஆண்டு தற்செயலாக துப்பாக்கி சுட்டதில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என தெரிவித்துள்ளது.



