பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. நாளை முன்பதிவு தொடக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 8ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ள தென்னக ரயில்வே, வரும் 4ஆம் தேதி முன்பதிவு தொடங்கும் என அறிவித்துள்ளது.அதன்படி, நாகர்கோவில் – தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் வரும் 11 18 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் தாம்பரம் – நாகர்கோவில் இடையே வரும் வரும் 14, 21 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
தாம்பரம் – கன்னியாகுமரி இடையிலான சிறப்பு ரயில் வரும் 12, 19 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் வரும் 13, 20 தேதிகளிலும் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. நெல்லை – செங்கல்பட்டு இடையேயான அதிவிரைவு ரயில் வரும் 9, 16 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் வரும் 10, 17ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதேபோல, செங்கல்பட்டு – நெல்லை அதிவிரைவு ரயில் 9, 16 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் வரும் 10, 17 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படவுள்ளது. கோவை – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் வரும் 11, 18 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் வரும் 12, 19ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
போத்தனூர் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் வரும் 14, 21 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் அதே நாட்களில் புறப்படும் எனத் தெரிவித்துள்ளது.





