விலங்கியல் பூங்காவில் சிறுவர்களை விழுங்க முயற்சித்த முதலை..!
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் பசியோடு இருந்த முதலை ஒன்று சிறுவர்களை விழுங்க முயலும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மியாமியில் உள்ள விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் முதலையை இரு சிறுவர்கள் கண்ணாடி சுரங்கத்திற்குள் சென்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த முதலை சிறுவர்களை தனக்கான இரை என நினைத்து வாயை திறந்து விழுங்க முயற்சிக்கிறது. இடையில் கண்ணாடி இருப்பதை இறுதியில் அறிந்த முதலை இரை கிடைக்காமல் ஏமாந்து போனது.






