--- --:--:-- --

ஓர் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் அகற்றப்பட்டுவிடும்..!

3

ர் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக மக்களவையில் விளக்கம் அளித்த சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாட்டில் தற்போது 93 விழுக்காடு வாகனங்கள் பாஸ்டாக் முறையை பின்பற்றி சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை செலுத்துவதாக கூறினார்.

 

இன்னும் ஏழு விழுக்காடு மக்கள் பாஸ்டாக் எடுக்காமல் இரண்டு மடங்கு கட்டணத்தை செலுத்துகிறார்கள் என்றார்.

 

ஜிபிஎஸ் மானிட்டர் முறையில் சுங்க கட்டணம் வசூல் மேற்கொள்ளும் திட்டம் ஓராண்டுக்குள் செயல்படுத்தப்பட்டு சுங்கச்சாவடிகள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon