ஜன்னல் கம்பியில் மாட்டிய குழந்தை ..!
ஜன்னல் கம்பிக்குள் மாட்டிக்கொண்டு தலையை வெளியே எடுக்க முடியாமல் அவதிப்பட்ட குழந்தையை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் மீட்டனர். கேரளாவில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஜன்னல் கம்பிக்குள் தலையை விட்டுள்ளது.
மீண்டும் எடுக்க முற்பட்டபோது தலையை எடுக்க முடியாமல் சிக்கியது. குழந்தையின் அழுகையை கேட்டு ஓடிவந்த பெற்றோர் குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் மீட்க முடியவில்லை.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மின்மோட்டார் மூலம் கம்பிகளை அறுத்து குழந்தையை மீட்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.






