கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார்..!
தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ள ஒரு படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாக நடிகை சன்னி லியோன் நடிக்க உள்ளார். கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு படங்களில் நடித்த ஸ்ரீசாந்த் தற்போது இந்த படத்தில் சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிட தயாராகும் இந்த படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிகை சன்னி லியோன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சன்னி லியோன் நடிப்பில் ஏற்கனவே தமிழில் இரண்டு சரித்திரப் படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.







