ஆந்திராவில் படகு மூலம் மணமகன் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட மணப்பெண்..!
ஆந்திராவின் கோனாசனா மாவட்டத்தில் மழை வெள்ளத்திற்கு மத்தியில் மணப்பெண் ஒருவர் படகு மூலம் மணமகன் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். பிரசாத் என்ற பெண்ணுக்கும் அவருக்கும் இந்த மாதம் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பருவமழையை தவிர்க்கும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்திற்கு பதிலாக ஜூலை மாதம் திருமணத்தை நடத்தி முடித்தனர். ஆனால் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மணப்பெண் மணமகன் வீட்டிற்கு படகில் அழைத்துச் செல்லப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




