--- --:--:-- --

டி ஷர்ட் தொடர்பான சண்டையில் வாலிபரை தாக்கிய இளம்பெண்..!

7

டெல்லி மெட்ரோ ரயிலில் டி ஷர்ட் தொடர்பான சண்டையில் வாலிபர் ஒருவரை இளம்பெண் சரமாரியாக அறைந்தது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அமைதியாக பேசிக்கொண்டிருந்த இருவரும் பையில் இருந்த டீ சர்ட்டை எடுத்து இளம்பெண் காண்பித்தபோது கலவரமானது.

 

இந்த டீ ஷர்ட்டை தாம் ஆயிரம் கொடுத்து வாங்கியதாக இளம்பெண் கூற அதற்கு அது 150 ரூபாய்க்குக் கூட தகுதியில்லை என்று அந்த வாலிபர் தெரிவித்தது சண்டையானது. ஆத்திரமடைந்த அந்த பெண் வாலிபரை சரமாரியாக கன்னத்தில் அறைந்து தன் வாய்க்கு வந்ததையெல்லாம் சரமாரியாக திட்டித் தீர்த்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon