--- --:--:-- --

பிரேக் அப் ஆனதால் காதலியுடன் எடுத்த கொண்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்! காதலி தீக்குளிப்பு!

39

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இளைஞன் தன்னை காதலித்த போது எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டதால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ராதா நல்லூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உதய் பிரகாஷ் என்பவரை காதலித்துள்ளார். ஆனால் இளைஞரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் நட்பை முறித்துக் கொண்டுள்ளார்.

 

இந்த நிலையில் இளம்பெண் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து இளம் பெண்ணையும் அவரது சகோதரியையும் வீடு புகுந்து தாக்கியுள்ளார். மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon