70–80 ஆண்டு திட்டங்களின் விரிவாக்கம் தான் – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் 70 முதல் 80 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள திட்டங்களே என்றும், ஒவ்வொரு ஆட்சியிலும் அவை காலத்திற்கேற்ப விரிவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது வழக்கமான நடைமுறையாகும் என்றும் தெரிவித்தார்.
தற்போதைய 2026–27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலும் அதே அடிப்படையில் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மாநிலத்தின் புதிய நிதி ஆதாரங்களை உருவாக்கி சீரமைக்கும் பணிகளை முதலமைச்சர் விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





