இரட்டை மரணம் – தூத்துக்குடியில் மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம்!
இரட்டை மரணம் ஏற்பட்ட தூத்துக்குடியில் மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆக இருந்த அருண் பாலகோபாலன் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவரது இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட எஸ்பியான ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்மண்டல ஐஜியான சண்முக ராஜேஸ்வரன் இன்று ஓய்வு பெறுவதால் அந்த பதவிக்கு பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சாத்தான்குளம் காவல் நிலையம் மாவட்ட வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
வழக்கு நடை முறைகளைக் கண்காணித்த வருவாய்த்துறை சார்பில் தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனிடையே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்ஆகியோரை சிறைக்கு அனுப்ப மருத்துவ தகுதிச் சான்றிதழ் அளித்த மருத்துவர் வெண்ணிலா தொடர் விடுப்பில் உள்ளார். ஏற்கனவே நான்கு நாட்கள் விடுப்பில் இருந்த அவர் தற்போது மேலும் 15 நாட்களுக்கு தனது விடுப்பை அதிகரித்துள்ளார்.






