--- --:--:-- --

காவல்துறையினரின் வற்புறுத்தலிலால் அளிக்கப்பட்ட மருத்துவ சான்று..!

43

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஜெயராஜ், பென்னிக்ஸ்க்கு மருத்துவ தகுதிச் சான்று வழங்கிய மருத்துவர் வெண்ணிலா ஏற்கனவே நான்கு நாட்கள் விடுப்பு எடுத்த நிலையில் தற்போது 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.

 

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்சை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கு முன்பு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அவர்கள் இருவருக்கும் போலீசார் மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற்று இருந்தனர்.

 

அவர்கள் இருவரும் சிறையிலேயே உயிரிழந்த நிலையில் அதற்கு மறுநாளிலிருந்து அவர்களுக்கு மருத்துவ தகுதிச் சான்று அளித்த மருத்துவர் வெண்ணிலா 4 நாட்கள் விடுப்பில் சென்றார். விடுப்பு முடிந்து அவர் இன்று பணியில் சேர்ந்து இருக்கவேண்டும்.

 

ஆனால் மருத்துவர் வெண்ணிலா மேலும் 15 நாட்கள் மருத்துவ விடுப்பு சென்றிருப்பதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் இசக்கி தெரிவித்துள்ளார் . ஜெயராஜ் சிறையில் அடைப்பதற்கு போதுமான உடல் நலத்துடன் இருப்பதாக காவல்துறையினரின் வற்புறுத்தலின் பேரில் மருத்துவர் வெண்ணிலா சான்றாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon