முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால்
காவிரி விவகாரம் குறித்த எங்கள் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் முடிந்தால் பதில் சொல்லட்டும்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சவால் விடுத்தார். தவெக ஆட்சி அமைந்த பின் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத் சுமார் 129 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட் உரையை வாசித்தார்.
பின்னர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றது கடந்த மூன்று மாதங்களாக கடன் தள்ளுபடியில் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்” என்றார். இந்த ஆட்சி அமைந்துள்ள இருந்து அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால் விவசாயிகள்தான் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று போல தான் என்றும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தோமோ அந்த திட்டங்களை பெயர் மாற்றம் செய்து அந்த திட்டங்களை அறிவித்திருக்கிறார் என்று விமர்சித்தார்.உருப்படியாக எதுவும் கிடையாது, முதலமைச்சர் சொன்ன முக்கியமான வாக்குறுதி – 5 ஏக்கர் இளம் வைத்திருக்கக்கூடிய பயிர் கடன்கள் தள்ளுபடி வாக்குறுதியை சொல்லித்தான் மக்களை ஏமாற்றியதாக தெரிவித்தார்.
இன்று வரை கர்நாடகம் நீரை திறக்கவில்லை திறக்க முடியாது என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டார்கள். முதலமைச்சர் நான் சென்று பேச்சுவார்த்தை நடத்த போறேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் அங்கு உள்ள முதல்வர் தண்ணீர் எல்லாம் கொடுக்க முடியாது வராதீர்கள் என்று சொல்லிவிட்டார்” என்று குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின் “காவிரி விஷயத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டங்கள் விஷயத்தையும் பேச என்றும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறோம் என காட்ட வேண்டும் என்றும் கேட்டோம். அதற்கும் வழக்கம் போல முதல்வர் பதிலளிக்கவில்லை” என்றார்.
“நாளை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும், விவசாயிகள் பிரச்சனை பற்றி அவையில் விவாதிக்க வேண்டும் என சபாநாயகரிடம் எங்கள் கடிதத்தை கொடுத்திருக்கிறோம். அதற்கு வாய்ப்பு கொடுப்பார் என்று நம்புகிறோம்!. அப்போது விரிவாக பல்வேறு விஷயங்களை நாங்கள் எழுப்புவோம்! அதற்கு முதலமைச்சர் வாய் திறந்து பதில் சொல்வார் என்று தமிழ்நாட்டு மக்கள் மாதிரி, விவசாய பெருங்குடிகளைப் போல நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம்!” என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்தார்.
கருப்பு சட்டை அணிந்துவந்தது குறித்து செய்தியாளர்களை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “தொடர்ந்து 3 மாதமாக விவசாயிகள் தொடர் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக தான் இன்று கருப்பு சடையில் வந்திருக்கிறோம்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, “நாளை காவிரி விவகாரம் குறித்து பேரவையில் பேச இருக்கிறோம்; அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்ப இருக்கிறோம். முடிந்தால், முதல்வருக்கு தைரியம் இருந்தால் பதில் சொல்லட்டும்; ஆனால் அவையில் பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




