--- --:--:-- --

வீட்டிற்குள் நுழைந்த கரடி..! அச்சத்தில் பொது மக்கள்..!

8

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பகல் நேரத்திலேயே தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சர்வசாதாரணமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

கோத்தகிரி அருகே உள்ள மூன்று ரோடு பகுதியில் ராமர் என்பவரது வீட்டிற்குள் நுழைந்து சர்வ சாதாரணமாக உலா வரும் காட்சிகளை வீட்டில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon