காட்டு பன்றிக்கு வைத்த மின் வேலியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வயல்வெளியில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார். மானாமதுரையை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார்.
இவர் பணி முடித்துவிட்டு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் செல்லும் சாலையில் இருந்த வயல்வெளியில் சென்றால் காயங்களுடன் சடலமாக கிடந்தது. இது குறித்து காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு மேற்கொண்ட விசாரணையில் பணி முடித்துவிட்டு வீடு திரும்பியபோது செந்தில்முருகன் அருகிலிருந்த வயல்வெளிக்கு சென்றுள்ளார். உரிமையாளரான ஸ்டீபன் ராஜ் என்பவர் காட்டுப்பன்றிகாக அனுமதியின்றி அமைத்த வேலியை செந்தில்முருகன் மிதித்ததால் அவர் நிகழ்விடத்திலேயே மின்சாரம் தாக்கியது தெரியவந்தது.





