என்னை தற்கொலைக்கு தூண்டினார் என நீதிமன்றத்தில் கங்கனா பரபரப்பு..!
பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத்திற்கும் நடிகர் ரித்திக் ரோஷனுக்கும் தொடர்பு இருந்ததாக ஒரு சர்ச்சை ஏற்பட்டது.
அப்போது ரித்திக்கிடம் கங்கனா மன்னிப்பு கேட்குமாறு ஜாவித் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு கங்கனா மறுப்பு தெரிவித்ததோடு ஜாவத்தை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜாவேத் கங்கனாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
விசாரணையில் தன்னை மிரட்டியதாகவும் தற்கொலைக்கு தூண்டியதாகவும் கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.





