திருவாடானையில் சமூக இடைவெளியுடன் நடந்த கோவில் கும்பாபிஷேம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை எல்லை காக்கும் கடவுளான அருள்மிகு ஆதினமிளகி அய்யனார் கோவில் அதன் அருகிலேயே அருள்மிகு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம் உள்ளது. இரண்டு ஆலயங்களுக்கும் அனைத்து வேலைகளும் முடிந்து கும்பாபிஷேகத்துக்கு தயாராக இருந்த நிலையில் கொரோன வைரஸ் தெற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதனால் திருக்கோவில்களின் கும்பாபிஷேகங்கள் தடைபட்டிருந்து. இந்நிலையில் தமிழக அரசு கிராம சோவில்களில் வழிபாடு நடத்தலாம் என உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து சமூக இடைவெளியுடன் எவ்வித ஆர்ப்பாட்டமும் சீரியல் லைட் அலங்காரமும் இன்றி மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்கு சுமார் 100க்கும் குறைவான கலந்துகொண்ட பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் வைத்து புனிதநீர் பூஜிக்கப்பட்டு அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு புனித நீரானது அருள்மிகு ஆதினமிளகி அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் மற்றும் ஐயப்பன் கோவில் கலசங்களில் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.






