டெல்லியில் கொரொனா தொற்றை 20 நிமிடங்களில் கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் கருவி..!
இந்தியாவில் டெல்லியில் கொரொனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மக்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என சோதித்துக் கொள்ள ரேபிட் ஆன்டிஜன் என்ற பரிசோதனை கருவி உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கருவியின் மூலம் கொரொனா இருக்கிறதா இல்லேையா என்பதை உறுதி செய்ய 20 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது.
இதன்மூலம் டெல்லியில் பத்தாயிரம் பேருக்கு கொரொனா பரிசோதனை எளிதில் செய்ய முடியும். இந்த பரிசோதனை கருவி மூலம் 75 சதவீதம் மட்டுமே முடிவுகள் இருக்கும் ஆயினும் கொரொனா அதிகரிப்பின் காரணமாக இந்த மாதிரியான கருவி மக்களிடையே ஒரு அச்சத்தை போக்கும் வகையில் உள்ளது.
கொரோனா தொற்றினை விட அது குறித்த அச்சமே மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. எனவே தங்களுக்கு தொற்று உண்டா இல்லையா என தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே இந்த கருவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






