வெளிநாட்டில் உயிரிழந்த தமிழக இளைஞர்..!
வெளிநாட்டில் உயிரிழந்து தமிழகம் கொண்டுவரப்பட்ட கடலூரை சேர்ந்தவரின் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மங்களம் பேட்டையை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சவுதி அரேபியாவில் கம்ப்யூட்டர் டிசைனராக பணியாற்றி வந்தார்.
கடந்த மாதம் 23ஆம் தேதி மாரடைப்பால் இளங்கோவன் உயிரிழந்த நிலையில் அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.
பின்னர் மங்கையன் பேட்டை கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், சி.வி. கணேசன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





