விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் நகையை திருடிய மூதாட்டி..!
மதுரையில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் நகையை திருடிய மூதாட்டி கைது செய்யப்பட்டார். தெற்கு மாசி வீதியைச் சேர்ந்த அழகர் என்பவரது மகள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது சிறுமியின் தங்க வளையல் காணாமல் போனது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





