--- --:--:-- --

பொது சிவில் சட்டம் கருத்து தெரிவிக்க மேலும் இரண்டு வாரம் கால அவகாசம்..!

3

பொது சிவில் சட்டம் தொடர்பாக தனி நபர்கள், நிறுவனங்கள், மத அமைப்புகள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கான அவகாசம் வரும் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் வெளியிட்டிருக்கும் செய்தி தொகுப்பில் உறுப்பினர், டெல்லி என்ற சட்ட ஆணையத்தின் முகவரிக்கு கடிதம் மூலமாகவும் அல்லது அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon