--- --:--:-- --

ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

1

தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர், சூரப்பட்டு மற்றும் கிளாம்பாக்கத்தை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி, இறக்க கூடாது என தமிழ்நாடு அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசின் உத்தரவுக்கு எதிராக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அதன்படி, சென்னையில் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் எனவும் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

 

இதே போன்று, பயணச்சீட்டு முன்பதிவு செயலிகளான, Red Bus, Abhi Bus, உள்ளிட்ட செயலிகளிலும் பொதுமக்களை குழப்பும் வகையில் வேறு இடங்களை பதிவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் போக்குவரத்துத் துறை குறிப்பிட்டுள்ளது.

Right Menu Icon