ஆகஸ்ட் 14ல் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்..!
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணாக்கர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கும் அரசாணை கடந்த மே மாதம் தமிழக அரசு வெளியிட்டது.
ஆனால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதன் காரணமாக ஜூன் மூன்றாம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க முடியாமல் போனது. இந்த நிலையில் சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் 14-ம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.





