செல்போன் திருட்டில் கைதானவர் உயிரிழப்பு : வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
துரைப்பாக்கம் பகுதியில் செல்போன் திருட்டில் கைதான தினேஷ் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காவல்துறை தாக்கியதால் தினேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டிய நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெண் உதவி ஆய்வாளர் உட்பட இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் இரண்டு தலைமை காவலர்களை இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.





